திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (20:52 IST)

திருப்தி தேசாயை திருப்பி அனுப்பிய ஐயப்ப பக்தர்கள்: கொச்சியில் பரபரப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தாலும் இன்னும் பெண்கள் ஐயப்பன் சன்னிதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை

இந்தா நிலையில் சமூக ஆர்வலரான திருப்தி தேசாய் என்ற பெண் நேற்று சபரிமலைக்கு செல்லவுள்ளதாகவும், தன்னை யாரும் தடுக்க முடியாது என்றும், தனக்கு தக்க பாதுகாப்பை கேரள முதல்வர் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை திருப்தி தேசாய் உள்ளிட்ட 6 பெண்கள் சபரிமலைக்கு செல்ல கொச்சிக்கு விமானத்தில் வந்தனர். ஆனால் கொச்சி விமான நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் காரணமாக திருப்தி தேசாய் சுமார் 16 மணி நேரம் காத்திருந்தார். இருப்பினும் போராட்டக்கார்கள் கலையவில்லை என்பதால் வேறு வழியின்றி கொச்சியில் இருந்து அவர் புனேவுக்கு திரும்பி சென்றார். போகுமுன் தான் மீண்டும் சபரிமலைக்கு வருவேன் என்றும் அவர் சவால் விட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து ஐயப்ப பக்தர் ஒருவர் கூறியபோது, 'சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி மாலையணிந்து விரதம் இருந்து உண்மையான பக்தியுடன் பெண்கள் வந்தால் அவர்களை அனுமதிப்போம் என்றும், வீம்புக்கு கோவிலில் நுழைவேன் என்று கூறுபவர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்