எவன் தடுத்தாலும் ஐயப்பனை தரிசித்தே தீருவேன்: விடாமல் அடம் பிடிக்கும் பெண்ணியவாதி
யார் தடுத்தாலும் ஐயப்பனை நேரில் தரிசித்தே தீருவேன் என பெண்ணியவாதி திருப்தி தேசாய் கூறியுள்ளார்.
சபரிமலைக்கு அனைத்து வயதுக்கு உட்பட்ட பெண்களும் வரலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இது ஐயப்ப பக்தர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு போராட்டங்களும் வெடித்தது. கடந்த மாதம் நடந்த பூஜையின் போது கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் கேரள அரசும் அனைத்து வயது பெண்களும், சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம் என்றும் சாமியை தரிசிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தது.
இந்நிலையில் 17ந் தேதி(நாளை) நடைதிறப்பின் போது, யார் தடுத்தாலும் நான் ஐயப்பனை தரிசித்தே தீருவேன் என திருப்தி தேசாய் என்ற பெண் சவால் விட்டிருந்தார். இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.
புனேவில் இருந்து இன்று அதிகாலை கொச்சி விமான நிலையத்திற்கு வந்த திருப்தி தேசாவை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவரை சிறைபிடித்த போராட்டக்காரர்கள் அவர் திரும்பு செல்ல வேண்டும் என முழக்கமிட்டனர்.
ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத திருப்தி தேசாயும் அவருடன் வந்த பெண்களும் யார் எப்படி எங்களை மிரட்டினாலும், நாங்கள் கண்டிப்பாக ஐயப்பனை தரிசித்தே தீருவோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.