திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:08 IST)

Co-WIN செயலியில் ஒரே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி எத்தனை பேர்பதிவு செய்யலாம்?

கோவின் செயலியை பயன்படுத்தி ஒரே தொலைபேசியில் எத்தனை பேர் வரை பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
கோவின் செயலியில் ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 6 பேர்கள் வரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஏற்கனவே 4 பேர் பதிவு செய்யலாம் என்று இருந்த நிலையில் தற்போது 6 பேர் பதிவு செய்ய முடியும் என மாற்றப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் தடுப்பூசி செலுத்திய விவரங்கள் செயலியில் தவறாக இருந்தால் பயனாளிகள் திருத்திக் கொள்ளும் வசதியும் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது