செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2019 (21:08 IST)

மகாராஷ்டிராவில் மீண்டும் தேர்தலா? அரசியல் கட்சிகள் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னும் அங்கு புதிய ஆட்சியை அமைக்கப்படவில்லை.  நவம்பர் 7ஆம் தேதிக்குள் தற்போதைய சட்டசபையின் காலம் முடிவடைவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்கப்பட வேண்டும்,  இல்லையேல் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகை செய்யப்படும் என்று கருதப்படுகிறது
 
இதனை அடுத்து இன்னும் மூன்று நாட்களே கெடு இருப்பதால் சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சி செய்து வரும் நிலையில் பாஜக வேறு ஒரு திட்டம் தீட்டி வருகிறது 
 
அதாவது பாஜக ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி கேட்டு, ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை என்றால் மற்ற எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு தராமல், எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை என்பதை காரணம் காட்டி, குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. குடியரசு தலைவர் ஆட்சி என்றாலே கிட்டத்தட்ட பாஜக ஆட்சிதான் என்று அக்கட்சியின் தலைமை கருதுவதாக கூறப்படுகிறது
 
மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிவசேனா கட்சிக்கு 56 இடங்கள் கிடைப்பது என்றும், இதனை அடுத்து ஒருசில மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த முறை சிவசேனாவுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட பாஜக முடிவு செய்திருப்பதாகவும், இந்த தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியை பெறலாம் என்றும் பாஜக கருதுவதாகவும் கூறப்படுகிறது
 
குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு அந்த மூன்று மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான பல திட்டங்களை அறிவித்தால், மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக மேலிடம் கருதுகிறது. இந்த திட்டம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்