1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (09:28 IST)

சோதனைக்குழாய் மூலம் பிறந்தவர்தான் சீதை: துணை முதல்வரின் சர்ச்சை பேச்சு

பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் பாஜக தலைவர்கள் பலர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கண்டனங்களை பெற்று வருவதும் பின்னர் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கையாக உள்ளது. 
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா என்பவர் இந்துக்களின் புனிதக்கடவுளான ராமரின் மனைவி சீதை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறி நெட்டிசன்களிடம் மாட்டியுள்ளார். டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பிறப்பது ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது என்றும் ராமரின் மனைவி சீதை சோதனை குழாய் தொழில்நுட்பத்தின் மூலம் பிறந்த முதல் குழந்தை என்றும் உ.பி துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார். ராமாயண புராணத்தில் சீதை மண்பானையில் பிறந்ததாக கூறப்பட்டிருப்பதால் சீதையை சோதனைக்குழாய் மூலம் பிறந்த குழந்தை என்று அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
 
மேலும் இவர் நாரதர் அனைத்து தகவல்களையும் அறிந்தவர் என்றும் ஒரு செய்தியை அனைத்து இடங்களுக்கும் பரப்பியவர் என்பதால் அவர் ஒரு கூகுள் போன்றவர் என்றும் மகாபாரத காலத்திலேயே நேரலை தொடங்கி விட்டதாகவும் மகாபாரத போர்காட்சிகளை திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் விளக்கி கூறியுள்ளதை குறிப்பிட்டு ஏற்கனவே கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.