செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (13:12 IST)

கிருஷ்ணர் வாழ்க்கை சொல்லும் பாடம்

பால கிருஷ்ணரும், அவரது அண்ணன் பலராமரும், நண்பர் சுதாமரும் காட்டு வழியில் நடந்து வந்தார்கள். இருட்டுவதற்குள் ஊர் திரும்பி விடலாம் என்று அவர்கள் வேகமாக நடந்தாலும் இரவைத் தடுக்க முடியவில்லை. இரவு நேரத்தில் காட்டுக்குள் தங்கியாக வேண்டிய நிலைமை.



காட்டுக்குள் பூதம் ஒன்று இருந்தது. அது அங்கு இரவு நேரங்களில் வரும் மக்களுடன் சண்டையிட்டு அவர்களை அடித்து சாப்பிட்டுவிடும். சண்டையிடும் போது எதிராளியின் வலிமையும் பூதத்திற்குச் சேர்ந்து விடும். இந்த மூவரும் திடகாரமானவர்கள். பார்த்ததும் பூதத்திற்கு ‘இன்று நல்ல வேட்டை தான்’ என்று தோன்றியது.

மூவர் முன்பும் வந்து நின்றது. நான்கு பேரும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். மூன்று ‘ஷிப்ட்’ போட்டு பூதத்துடன் சிறுவர்கள் சண்டையிட வேண்டும். யாரையாவது ஒருவரை பூதம் அடித்து வீழ்த்திவிட்டால், மூவரையும் சாப்பிட்டு விடும். ஒப்பந்தத்திற்கு மூவரும் ஒப்புக்கொண்டதும் முதலில் பலராமர் சண்டையிட்டார்.

பலராமர் வீரர் தான். ஆனால் பெரிதாக பூதம் வளரத் தொடங்கியதால், பலந்த காயத்தோடு சுதாமரை எழுப்பினார். அடுத்து சுதாமரும் ஆக்ரோஷத்துடன் போரிட்டார். இன்னும் நான்கு மணி நேரம் கழிந்தது. அவராலும் பூதத்தை வீழ்த்த முடியவில்லை. கடைசியாக கிருஷ்ணரை எழுப்பிவிட்டு சுதாமர் தூங்கிவிட்டார்.