வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (13:41 IST)

மகப்பேறு விடுமுறை ஆண்களுக்கும் உண்டு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

Pregnant
மகப்பேறு விடுமுறை ஆண்களுக்கும் உண்டு என்றும் ஒரு மாதம் ஆண்களுக்கு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்றும் சிக்கிம் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
சிக்கிம் மாநிலத்தில் அரசு ஊழியராக பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறுப்பை ஒரு வருடத்திற்கு நீடித்து அம்மாநில முதலமைச்சர் பிரேம் சிங் உத்தரவிட்டு உள்ளார். 
 
இதனை அடுத்து அரசு பெண் ஊழியர்கள் முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகப்பேறு விடுமுறை எடுக்கும் பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அந்த பெண்களின் கணவருக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்க உள்ளதாகவும் சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் அறிவித்துள்ளார்.
 
Edited by Siva