வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (10:09 IST)

குழந்தையின் உயிரைப் பறித்த பள்ளி வாகனம்.! டயரில் சிக்கி 1½ வயது குழந்தை பலி.!!

child
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தனியார் பள்ளி வேன் டயரில் சிக்கி பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரின் மகன் ரக்சன் (1½ வயது). குழந்தை ரக்சன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காடாம்புலியூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியின் வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. 
 
அப்போது குழந்தை ரக்சன் எதிர்பாராத விதமாக வேன் டயரில் சிக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை, உறவினர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
child death
அங்கு குழந்தை ரக்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,  குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்  கதறி அழுதது பார்ப்பவரை கண்கலங்க வைத்தது.

 
இந்த விபத்து தொடர்பாக காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.