பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம்: சோனியா காந்தி உத்தரவு

siddhu
பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம்: சோனியா காந்தி உத்தரவு
siva|
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார்

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து தனது கருத்துக்களுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்ரிந்தர் சொம்க் கூறியிருந்தார்

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு சித்து செல்வார் என்றும் அவர் அங்கு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சோனியா காந்தி சற்றுமுன் பிறப்பித்த உத்தரவில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்

மேலும் சங்கத் சிங், சுக்விந்தர் சிங், பவன் கோயல் மற்றும் குல்ஜித் சிங் ஆகிய 4 பேர்கள் செயல் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :