திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 13 மே 2023 (12:19 IST)

ஆரம்பித்தது பஞ்சாயத்து: என் அப்பாதான் முதல்வர் என சித்தராமைய்யா மகன் கருத்து..! டிகே சிவகுமார் எதிர்ப்பு..!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வரும் நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து இருவேறு கருத்துக்கள் பரவி வருவது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலையில் உள்ள நிலையில் ’என் அப்பா தான் முதலமைச்சர்’ என சித்தராமைய்யா மகன் தெரிவித்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சித்தராமய்யா மகன் கூறிய கருத்துக்கு முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டிகே சிவகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சித்தராமைய்யா தான் கர்நாடக முதலமைச்சர் ஆவார் என்று அவரது மகன் யஹிந்திரா கூறியதை பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் கர்நாடக மாநில முதல்வராக யாரை தேர்வு செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran