1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (18:36 IST)

மோடி ராகுல் சண்டையில் எடியூரப்பாவை இழுத்து விட்ட சித்தராமையா!

கர்நாடக தேர்தல் நெருங்கியுள்ளதால் தேர்தல் பிரச்சாரங்களும், பாஜக - காங்கிரஸ் கட்சிகள் மாற்றி மாற்றி குற்றம்சாட்டுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளது. 
 
அந்த வகையில், ராகுல்காந்தி சமீபத்தில், ‘நாட்டில் நடக்கும் ஊழல், பாலியல் பலாத்காரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல், நிரவ் மோடி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பாராளுமன்றத்தில் 15 நிமிடங்கள் பிரதமர் மோடியால் பேச முடியுமா? என்று சவால் விட்டார். 
 
இதர்கு பிரதமர் மோடியோ, உடுப்பி கர்நாடகா மாநில காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை குறிப்பு சீட்டு இல்லாமல் 15 நிமிடங்கள் இந்தியிலோ, ஆங்கிலத்திலோ அல்லது உங்கள் தாயாரின் தாய் மொழியான இத்தாலியிலோ பேச முடியுமா என்று ராகுலுக்கு பதில் சவால் விடுத்தார்.
இதை கேட்டதும் பொங்கி எழுந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது டுவிட்டரில், அன்புள்ள பிரதமர் மோடிக்கு கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் செய்த சாதனைகளை எழுதி வைக்காமல் 15 நிமிடங்கள் பேச முடியுமா? என்று ராகுல் காந்தியிடம் சவால் விட்டு இருந்தீர்கள். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்.
 
கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்த போது எவ்விதமான சாதனைகள் செய்தார் என்பதை நீங்கள் எழுதி வைத்தோ அல்லது காகிதத்தை பார்த்தோ 15 நிமிடங்கள் பேச முடியுமா? என்று குறிப்பிட்டுள்ளார்.