காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன் பின்னர் மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் காங்கிரஸின் கோட்டை எனக்கூறப்படும்...