திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 மே 2018 (20:20 IST)

நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்ட சித்தராமையா!

தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய கர்நாடக முதல்வர் நரேந்திரசாமிக்கு பதிலாக நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. பாஜக கர்நாடகவை கைப்பற்றியாக வேண்டும் என்று, காங்கிரஸ் கர்நாடகவை விட கூடாது என்றும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
மோடி, ராகுல், சித்தராமையா என அனைவரும் ஒருவரைக்கொருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மோடி ராகுல் காந்திக்கு சவால் விட்டால், சித்தராமையா மோடிக்கு சவால் விட்டு வந்தார். இந்நிலையில் சித்தராமையா பிரச்சாரத்தின் போது மோடிக்கு ஓட்டு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சித்தராமையா, நரேந்திர சாமிக்கு பதிலாக நரேந்திர மோடி என வாய் தவறி கூறிவிட்டார். பின்னர் உடனே திருத்திக்கொண்டார்.