883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் கர்நாடக தேர்தலில் போட்டி

kn
Last Updated: செவ்வாய், 8 மே 2018 (12:03 IST)

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் 883 கோடீஸ்வரர்கள், 645 கிரிமினல்கள் போட்டியிடுவதாகத் தெரியவந்துள்ளது.
 


கர்நாடகாவில் மொத்தம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களில் 645 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 254 பேர் மீது மோசமான கிரிமினல் வழக்குகளும், 391 பேர் மீது சாதாரண கிரிமினல் வழக்குகளும் பதிவாகியுள்ளன.

223 பாஜக வேட்பாளர்களில் 208 வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களாக உள்ளனர். அதேபோல 220 காங்கிரஸ் வேட்பாளர்களில் 207 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 199 மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களில் 154 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 1,090 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 199 பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ளனர் என பிரபல தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :