ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (08:56 IST)

பரபரப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராய பலி விவகாரம்.. கள்ளக்குறிச்சி விரைகிறார் ஈபிஎஸ்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் திமுக அரசை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக இந்த விவகாரத்தை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கள்ளக்குறிச்சி விரைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும் பலியானவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva