வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (15:37 IST)

வயநாடு நிலச்சரிவில் மிஞ்சிய ஒரே ஒரு உறவும் சாலை விபத்தில் மரணம்.. அனாதையான இளம்பெண்..!

வயநாடு நிலச்சரிவில் தனது ஒரே ஒரு உறவை தவிர அனைவரையும் இழந்த இளம் பெண் அந்த ஒரு உறவையும் சாலை விபத்தில் பறிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஜூன் 30 ஆம் தேதி வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிப்பின் போது தனது பெற்றோர் சகோதரி உட்பட குடும்பத்தில் உள்ள ஒன்பது பேரை இழந்தவர் சுருதி என்ற இளம் பெண். சுருதியின் வருங்கால கணவரான 24 வயது ஜென்சன் என்பவர் மட்டும் இந்த நிலச்சரவில் உயிர் பிழைத்தது அவருக்கு ஒரு ஆதரவாக இருந்தது.
 
ஆனால் அவரும் நேற்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து ஒரே ஆறுதலாக இருந்த வருங்கால கணவரையும் சுருதி இழந்துவிட்ட நிலையில் தற்போது அவர் அனாதை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த ஜூன் இரண்டாம் தேதி சுருதி மற்றும் ஜென்சன் இடையே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது தனது வருங்கால கணவரை சுருதி இழந்துவிட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த சுருதிக்கு ஒரே ஆதரவாக வருங்கால கணவர் மட்டும் இருந்த நிலையில் அவருடைய உயிரும் பறிபோனது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran