புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2019 (13:36 IST)

கங்குலி - அமித் ஷா சீக்ரெட் டீலிங் என்ன? அம்பலமான உண்மை!!

கங்குலி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததால், கங்குலி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டார் என வெளியான செய்திக்கு அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். 
 
பிசிசிஐயின் தலைவர் பதவி மற்றும் மற்ற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற இருந்த நிலையில் நேற்று பிசிசிஐயின் புது தலைவர், பிசிசிஐயின் புது செயலாளர், பிசிசிஐயின் புது பொருளாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.  
 
அந்த வகையில், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும், பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூரின் சகோதரர் அருண் துமால் புதிய பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். 
ஆனால், கங்குலியின் நியமனத்தில் அமித் ஷாவின் தலையீடு உள்ளதாக கூறப்பட்டது. ஆம், கடந்த சனிக்கிழமை கங்குலி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தாகவும், இப்படித்தான் போட்டியின்றி கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவித்தன. 
 
இந்த செய்திக்கு கங்குலி விளக்கம் அளிக்க மறுத்த நிலையில், அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அமித் ஷா கூறியதாவது,  பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பிசிசிஐ தலைவராக யார் வர வேண்டும் என்று நான் முடிவு செய்ய முடியாது.
நான் கிரிக்கெட்டுடன் கடந்த பல ஆண்டுகளாக தொடர்பு வைத்துள்ளேன். எனவே கங்குலி என்னை சந்தித்துப் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதேபோல் தேர்தலுக்காக கங்குலியிடம் பேரம் பேசப்பட்டது என கூறுவம் பொய்.
 
எங்களது சந்திப்பில் அரசியல் பேசவில்லை. அதே சமயத்தில் கங்குலி விரும்பி வந்தால் அவரை வரவேற்று சேர்த்துக்கொள்ள பாஜக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.