1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:49 IST)

ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும்: அறக்கட்டளை திடீர் அறிவிப்பு..!

seerati saibaba pooja
ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என அறக்கட்டளை நிர்வாகம் திடீரென அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மிகவும் பிரபலம் என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஷீரடி சாய்பாபா கோவிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பணியில் அமர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை கண்டித்து மே ஒன்றாம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என கோவில் அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் திரளாக பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் மத்திய பாதுகாப்பு தொழில் படையினரால் பக்தர்களை சரியாக கையாள முடியாது என அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran