அன்னை மகளிர் கல்லூரியில் "16ம் ஆண்டு விளையாட்டு விழா"
அன்னை மகளிர் கல்லூரியில் " 16வது விளையாட்டு விழா" சிறப்பாக நடைபெற்றது. அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை தலைவர் தங்கராசு தலைமையுரையாற்றினார்.கல்லூரியின் முதல்வர் முனைவர்.சாருமதி சிறப்புரையாற்றினார்.
உடற்கல்வி இயக்குநர் திருமதி.கலா ஆண்டறிக்கை வாசித்தார். இளநிலை இரண்டாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி. யாழினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட கபாடி சங்கத்தின் செயலாளர் திரு.சேதுராமன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி ஊக்குவித்தார். 100M, 200M , வாலிபால், எறிபந்து , கயிறு இழுத்தல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பளு தூக்குதல் போன்ற போட்டிகள் மாணவிகளுக்கும் , எறிபந்து, கயிறு இழுத்தல், மற்றும் கிரிக்கெட் போட்டி பேராசிரியர் களுக்கும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் திரு.மலையப்பசாமி, செயலாளர் டாக்டர்.முத்துக்குமார், பொருளாளர் திரு.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், துணை முதல்வர், கலை புலத்தலைவர், பேராசிரியர்கள்,பயிற்றுனர் கார்த்திகேயன், அலுவலர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் இளங்கலை முதலாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி பிருந்தா நன்றியுரை வழங்கினார்.