1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:28 IST)

நேற்றைய சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது சென்செக்ஸ்!

share
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சென்செக்ஸ் திடீரென 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 700 புள்ளிகள் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து 57277 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 212 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 166 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது