ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (09:46 IST)

450 புள்ளிகளுக்கும் மேல் திடீரென சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Share Market
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று திடீரென மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் சுமார்  490 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 545 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 135 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 21 என்ற புள்ளிகளில் வருத்தமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை சமீபகாலமாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென கிட்டதட்ட 500 புள்ளிகள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
 
இருப்பினும் வரும் நாட்களில் பங்குச்சந்தை உயரவே வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva