1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (09:37 IST)

மிகப்பெரிய வீழ்ச்சியில் பங்குச்சந்தை: என்ன காரணம்?

Share Market
அமெரிக்க பெடரல் வங்கி நேற்று வட்டி விகிதத்தை உயர்த்தியதையடுத்து நேற்று இந்திய பங்குச் சந்தை மட்டுமன்றி உலக நாடுகளின் பங்குச் சந்தை பயங்கரமாக சரிந்தது 
 
மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் இன்றும் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
 
 நீண்ட இடைவேளைக்கு பிறகு 51 ஆயிரத்திற்கு குறைவாக சென்செக்ஸ் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 150 புள்ளிகள் குறைந்து 15212 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய பங்குச் சந்தை படுமோசமாக வீழ்ச்சி அடைந்து வருவது அதில் முதலீடு செய்வதவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது