1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (12:46 IST)

டெல்லி ஜே.என்.யூ பல்கலையின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்!

டெல்லி ஜே.என்.யூ பல்கலையின் முதல் பெண் துணைவேந்தர் நியமனம்!
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதல் முதலாக பெண் ஒருவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
புனே காவித்ரி பூலே பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த சாந்தினிஸ்ரீ பண்டிட் என்பவரை  டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக மத்திய கல்வி அமைச்சகம் நியமனம் செய்தது
 
இந்தியாவில் புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்கு முதல் முறையாக பெண் ஒருவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது