1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. server problem sbi online service down

சர்வர் கோளாறு: நாடு முழுவதும் முடங்கிய எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவை..!

சர்வர்
சர்வர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ என்பதும் இந்த வங்கிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் சேவையை வழங்கியுள்ள நிலையில் இன்று காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக ஆன்லைன் சேவையில் து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இதன் காரணமாக நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி பயனர்கள் யூபிஐ, நெட் பேங்கிங், உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துவதில் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கோளாறு சரி செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலக சாலையில் பேரணி!