வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (09:44 IST)

இனி யூபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம்! – எந்த பரிவர்த்தனைக்கு எவ்வளவு கட்டணம்?

UPI
இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட அளவிற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பணமதிப்பிழப்பு செயல்படுத்தப்பட்டது முதலாக ஆன்லைன் பண பரிவர்த்தனையை அரசு ஊக்குவித்தது. அதன்படி பலரும் தங்கள் வங்கி கணக்குகளை யூபிஐ (UPI) –ல் இணைத்து கொண்டனர். அதன்மூலம் கூகிள் பே, போன் பெ, பேடிஎம் உள்ளிட்ட பல பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சமீபத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் அதன் வாயிலாக ரீசார்ஜ் செய்தல், டிக்கெட் புக்கிங் செய்தல் போன்ற சேவைகளுக்கு சேவை கட்டணம் (Convenience fee) நிர்ணயித்தன.

இந்நிலையில் தற்போது National Payments Corporation of India (NPCI) யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க பரிந்துரை செய்துள்ளது. பொருட்கள் வாங்க ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் செலவழிக்கும்போது வாங்கப்படும் பொருட்களை பொருத்து இந்த சதவீதம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி எரிபொருளுக்கு 0.5%, டெலிகாம், தபால் துறை, கல்வி, விவசாயம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 0.7%, சூப்பர்மார்க்கெட் பரிவர்த்தனைகளில் 0.9%, மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், ரயில்வே சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு 1% வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதுடன், இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K