1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated: செவ்வாய், 28 மார்ச் 2023 (06:59 IST)

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்: ஒன்றரை மணி நேரத்தில் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை..!

திருப்பதியில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் விற்கப்பட்ட நிலையில் ஒன்றரை மணி நேரத்தில் 6 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் இன்று காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் ஆறு லட்சம் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
 
இதில் ஒன்றரை மணி நேரத்தில் அனைத்து ஆறு லட்சம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran