வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (12:15 IST)

சேகர் ரெட்டி மகளுடன் நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு மாரடைப்பு: கவலைக்கிடம் என தகவல்

Sekhar Reddy
சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரியின் மகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியின் மகனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 26ஆம் தேதி நடைபெற திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது திடீரென மணமகன் சந்திரமவுலி ரெட்டி என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ குறிப்பில் சந்திரமவுலி ரெட்டி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran