நாடாளுமன்றம் செல்ல சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாடாளுமன்றம் சென்றுவர சசிகலா புஷ்பா எம்.பிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக எம்.பி. திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்து சர்ச்சையில் சிக்கிய அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சசிகலாவுக்கு தினமும் நாடாளுமன்றம் சென்று வர கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபற்றி பதிலளிக்குமாறு டெல்லி அரசு, டெல்லி காவல் ஆணையர், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை பதிலளிக்குமாறும் நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த வழக்கை நவம்பர், 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.