வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (07:34 IST)

’கிழக்கு சீமையிலே’ போல நடித்து காமியுங்கள்.. தேர்தல் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பிய ராதிகா..!

நடிகை ராதிகா விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் ’கிழக்கு சீமையிலே’ கேரக்டர் போல் நடித்துக் காமிங்கள் என்று சொல்ல அவர் உடனே நடித்து காண்பித்து பட்டையை கிளப்பியது வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக் தாகூர், தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையே போட்டி சரிசமமாக இருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் நடிகை ராதிகா நேற்று கப்பலூர் அருகே வாக்கு சேகரித்தபோது சுற்றி இருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கேரக்டரில் நடிப்பது போல் நடித்து காட்டுங்கள் என்று கேட்டார்

உடனே ராதிகா அந்த கேரக்டரை இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டவாறு, சேலையை மடியேந்தி ’உங்களுக்காக எல்லாமும் கொடுத்தேன், இப்ப உங்ககிட்ட கொடுக்குறதுக்கு இந்த உசுரு மட்டும் தான் மிச்சம் இருக்கு, அதையும் எடுத்துக்கோங்க, உங்களுக்கு கொடுக்கிறேன் என்று உருக்கத்துடன் நடித்து காண்பித்து அப்படியே எனக்கு வாக்கு போட்டு விடுங்கள் என்று கூறினார்

இதையடுத்து அனைவரும் கைதட்டி எங்கள் வாக்கு உங்களுக்குத்தான் என்று கூறிய காட்சிகளும் அங்கு இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பிரச்சாரத்துக்கு செல்லும்போது கூட நடிகை ராதிகா ஒரு நடிகை ஆகவே மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

Edited by Siva