பள்ளிகள் திறப்பு வழிகாட்டு வழிமுறைகள் வெளியீடு!
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் ஐந்தாம் கட்டமாக சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
தற்போது பள்ளிகள் திறப்பின்போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களைப் பகுதி வாரியாகப் பிரிப்பது பற்றி மாநிலங்கள் வரும் 15 ஆம் தேதிக்கு மேல் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறபது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில் கூறியுள்ளதாவது :
பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யவேண்டும்.உள்ளே கிருமி நீக்கம் செய்யவதற்காக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பள்ளிகளில் அவசர சிகிச்சை, பொது ஆதரவு, சுகாதார ஆய்வுக்குழு, போன்ற பணிகுக்களை அமைத்தல், பள்ளிகளில் நுழையும்போது, இருகை திட்டத்தில் சரிவர இடைவெளிகளைப் பின்பற்றுதல்,வகுப்பில் மாணவர்களும் ,ஆசிரியர்களும் கட்டாயமாக முகககவசம் அணிதல். பள்ளியில் முழு நேர சுகாதார செவிலியர்/ சுகாதார பணியாளர்/ மருத்துவர் இருக்க வேண்டும், மாணவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து இருந்தால் மட்டுமே அவர்களை பள்ளியில் அனுமதித்தல் வேண்டும். தனி மனித இடைவெளிகளை பின்பற்றுதல் ஆகியவற்றை ஒவ்வொரு மாநிலத்திற்கேற்ப பாதுகாப்பு முறைகளை தயாரிக்கலாம்.
அதேசமயம் பள்ளிகளை அக்டோபர் 15 ல் திறக்க வேண்டுமென்பது கட்டாயமில்லை என்றும், ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்படவேண்டும் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்க 2-3 வாரங்கள் ஆகலாம் என்று தெரிகிறது.