திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 செப்டம்பர் 2018 (09:58 IST)

கள்ள உறவில் ஆண்களுக்கு மட்டும் ஏன் தண்டனை? - இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்திய தண்டனை சட்டபிரிவான 497ஐ நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

 
சமீப காலமாக, இந்தியாவில் உள்ள சிக்கலான பிரச்சனைகளுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து வருகிறது. சமீபத்தில் கூட இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பலத்த வரவேற்பை பெற்றது.
 
அதேபோல், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 497 குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த சட்டப்படி, கணவர் அல்லாத வேறு ஒரு வேறு ஒருவருடன் ஒரு பெண் கள்ள உறவு கொண்டால், அதில் ஆண் மட்டுமே தண்டனை பெறும் நிலை உள்ளது.
 
இந்த பிரிவின் கிழ் கைது செய்யப்படும் ஆண்கள், பாலியல் வன்புணர்வு குற்றத்தின் கீழ் தண்டனை பெற்று வருகின்றனர். இந்த குற்றத்திற்கு 5 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சட்டப்பிரிவின் கீழ் ஆண் மட்டுமே எப்படி தண்டிக்கப்படலாம். இது பாலியல் சமத்துவத்திற்கு எதிரானது. எனவே, இந்த சட்டத்தையே நீக்க வேண்டும் என சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
அதேபோல், கள்ள உறவில், ஒரு பெண்ணின் சம்மதத்துடனேயே தவறு நடக்கிறது. எனவே, பெண்ணையும் சேர்த்தே தண்டிக்க வேண்டும் என சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
சர்ச்சைக்குரிய இந்த வழக்கின் தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று தீர்ப்பளிக்கவுள்ளார். இந்த தீர்ப்பு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.