திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 செப்டம்பர் 2018 (13:30 IST)

நீதிமன்ற வழக்குகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யலாம் : உச்ச நீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகளை  நேரடியாக ஒளிபரப்பு செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று அனுமதி அளித்துள்ளது.


இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை இன்று வாசித்த நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் வாதம் பிரதிவாதங்களை தீர ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதே சமயம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே பாரளுமன்றத்தின் நடவடிக்கைகளை வெளிப்படையாக காட்டுவது போல நேரலையின் வாயிலாக ஒளிபரப்ப முடியும்.

ஆனால் இதை செயல்படுத்துவதற்கு முன் மத்திய அரசானது நேரலையில் வழக்கு விசாரணைகளை  ஒளிபரப்புவதற்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகளையும், இதற்கான நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும். மத்திய அரசு இந்த வழிமுறைகளை முறைப்படுத்திய பிறகே நேரலை சம்பந்தமாக அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

நாட்டில் பொதுவாக மக்களிடம் நீதிமன்றத்தைக் குறித்த நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்திருப்பதாக நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.