1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: செவ்வாய், 31 ஜனவரி 2023 (17:23 IST)

ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்தவரின் ஜாமின் மனு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Delhi Court
ஏர் இந்தியா விமானத்தில் போதையில் இருந்த பயணி ஒருவர் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பயணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்தது
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட பயணி சங்கர் மிஸ்ராவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி சற்று முன் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த வழக்கில் மும்பை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
ஜனவரி 7ஆம் தேதி என்று அவர் பெங்களூர் போலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் சங்கர் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
 
Edited by Siva