1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (08:02 IST)

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க உத்தரவு! ஜார்கண்ட் முதல்வர் அதிரடி..!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என பல அரசியல் கட்சி குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கான விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

 சமீபத்தில் முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன் தனது முதல் பணியாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு வழங்க தயார் என்றும் அறிவித்துள்ளதை அடுத்து அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க மாநில அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva