வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (08:38 IST)

ஹேமந்த் சோரன் BMW கார் பறிமுதல்.. காங்கிரஸ் எம்பி அதிர்ச்சி..!

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்களுக்கு சொந்தமான BMW கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அந்த காரின் உரிமையாளர் காங்கிரஸ் எம்பி என்று தெரியவந்துள்ளது அடுத்து அந்த எம்பி அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது வீட்டில் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதில் BMW கார் ஒன்று என்று தெரிய வருகிறது.

இந்த கார் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது அது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி தீரஜ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் எம்பி யின் கார் எதற்காக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் இருந்தது என்று தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் இது குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற இருக்கும் நிலையில் காரின் உரிமையாளர் நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் வரும் சனிக்கிழமை அவர் ஆஜராக வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Edited by Siva