திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (07:16 IST)

சல்மான் கான் படம் இப்படிதான் இருக்கும்… இயக்குனர் முருகதாஸ் கொடுத்த அப்டேட்!

தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை முடித்ததும் முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். 

இந்நிலையில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் முருகதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் “சல்மான் கானுடன் இணைந்து படம் பண்ணுவது உற்சாகமானது. மறக்க முடியாத ஒரு திரை அனுபவத்தைப் பெற தயாராக இருங்கள். 2025 ரம்ஜானில் இந்த படம் ரிலீஸ் ஆகும்” எனக் கூறியுள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் சதிஷ் நத்யவாலா தயாரிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ். அதில் “எங்கள் படம் சர்வதேச தரத்தில் இருக்கும். மிகப்பெரிய அளவில் ஆக்‌ஷன் பொழுதுபோக்காக இருக்கும். செண்ட்டிமெண்ட் மற்றும் சமூக கருத்துகள் கலந்த கலவையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.