ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு!
ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இருக்கும் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
ரிசர்வ் வங்கியின் ஆளுனராக இப்போது செயல்பட்டு வருபவர் சக்தி காந்ததாஸ். இவர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னால் செயல்பட்ட அதிகாரிகளில் ஒருவர். இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இப்போது அவரின் பதவிக்காலம் டிசம்பர் 10 ஆம் தேதியோடு முடிய இருந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வரை அவர் பதவியில் நீடிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.