திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:23 IST)

47 ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - எஸ்.ஏ. பாஸ்பேட் நியமனம் !

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாஸ்பேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த நீதிபதியாக ரஞ்சன் கோகாய் எஸ். ஏ. பாப்டே என்பவரை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.  

இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அவரின் பதவி நியமன ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். பாப்டே வரும் நவம்பர் 18ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். இவரின் பதவிக் காலம்  2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை உள்ளது.