1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 28 அக்டோபர் 2019 (19:44 IST)

ரத்தத்தை மாற்றி ஏற்றிய திருப்பதி தேவஸ்தான் மருத்துவமனை: கோமாவுக்கு சென்ற நோயாளி

திருப்பதி, தேவஸ்தானம் மருத்துவமனையில் ரத்தத்தை மாற்றி அளித்து அறுவை சிகிச்சை அளித்தால் உடல்நல பாதிப்பு  ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ராமைய்யா என்ற நோயாளி கூறியுள்ளார்
 
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தஹி சேர்ந்த ராமையா என்பவருக்கு சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயங்கிவரும் ஒரு மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது 
 
அறுவை சிகிச்சைக்கு பின் அவர் கோமா நிலைக்கு சென்றதால் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டபோது அவரது உடலில் இரண்டு வகையான ரத்தம் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினர்.
 
இதுகுறித்து இராமையா அவர்கள் கூறியதாவது ’மாற்று அறுவை சிகிச்சை செய்ய திருப்ப்தி தேவஸ்தான மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு எனக்கு இரத்தத்தை மாற்றி செலுத்தியதால் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் எனக்கு மருத்துவமனை நிர்வாகம் ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் இது குறித்து வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்