உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேற உதவி செய்த ரஷ்யா!
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய ராணுவம் உதவி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ள நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கார்கீவ் உள்பட ஒரு சில நகரங்களில் இந்திய மாணவ மாணவிகளை பாதுகாப்புடன் கிழக்கு எல்லைப் பகுதிக்கு இரயில் மூலம் ரஷ்ய ராணுவ வீரர்கள் அனுப்பி வைத்ததாகவும் அவர்கள் 20 மணி நேர பயணத்திற்கு பிறகு எல்லையை அடைந்து அங்கிருந்து இந்தியா திரும்பி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
உக்ரைனில் சிக்கியுள்ள மீதி உள்ள இந்திய மாணவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற ரச்ஜுஅ ராணுவ படைகள் தொடர்ந்து உதவி செய்யும் என்று கூறப்படுகிறது