வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 16 மே 2019 (08:24 IST)

அனுமதி பெறாமல் விடுதலை செய்யப்பட்டாரா சஞ்சய்தத்? ஆர்டிஐ தகவலால் சர்ச்சை

மும்பையில் கடந்த 1993ஆம் நிகழ்ந்த நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அந்த தண்டனை ஐந்து ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் குறைக்கப்பட்டது. மேலும் அவர் தண்டனை காலத்தில் ஒருசில முரை பரோலில் வெளிவந்ததும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் நன்னடத்தை காரணமாக தண்டனை முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பாகவே சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் நடிகர் சஞ்சய்தத் 5 ஆண்டு தண்டனைக்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் ஆர்டிஐ யில் தகவல் கேட்டிருந்தார். இந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
அதில் மத்திய அரசின் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு அனுமதி பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மட்டும் சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்ய சொல்லியும் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.