1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (10:46 IST)

மும்மொழி கொள்கையால் பாதிக்கப்படும் சமஸ்கிரதம்.. ஆர்.எஸ்.எஸ். வருத்தம்

மத்திய அரசின் மும்மொழி கொள்கையால் சமஸ்கிருத மொழி மிகவும் பாதிக்கப்படுகிறது என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு, பள்ளிக் கல்வியில் மும்மொழி திட்டம் அறிமுகம் செய்யப்படுமென வெளியிட்டபின், தமிழகம் உட்பட் பல மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், “சமஸ்கிரத மொழியை கட்டாயமாக்க வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனின் துணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் தான் தேந்தெடுக்கிறார்கள், சிலர்தான் சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால் சமஸ்கிரதத்தை எவரும் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. ஆதலால் சமஸ்கிருதத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயமாக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே சமஸ்கிரதத்தை பேசும் மொழியாக உள்ள கிராமங்களை உருவாக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்கான கிராமங்களை தேர்வு செய்யும் முறை நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.