மாமியாரிடம் காதலை சொன்ன ஆர்யா! சயிஷாவின் அம்மா செய்த காரியத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க !

Last Updated: திங்கள், 22 ஜூலை 2019 (14:43 IST)
சயிஷாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியதை பற்றி முதன் முறையாக பலர் முன்னிலையில் வெளிப்படையாக பேசியுள்ளார் ஆர்யா. 


 
நடிகர் ஆர்யா,  மனைவி சயிஷா உள்ளிட்டோர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  காப்பான் படத்தில் நடித்துள்ளனர். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்ககள் கலந்துகொண்டனர். 
 
இவர்கள் இருவரும் வனமகன் படத்தில் நடித்தபோது காதலித்து திமனம் செய்துகொண்டதாக கோலிவுட் வட்டாரங்ககளில் பேசப்பட்டபோது சயிஷாவின் அம்மா அதனை மறுத்தார். மேலும் இந்த திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்தது எனவும் கூறினார். 
 
இந்நிலையில் தற்போது இதைப்பற்றி வெளிப்படையாக பேசிய ஆர்யா, "சாயிஷாவிடம் என் காதலை நான் நேரடியாக சொல்லவில்லை. இதற்குமுன் நான் பலமுறை பெண்களிம் நேரடியாக காதலை சொல்லி அது சொதப்பலாகியிருக்கிறது . எனவே அவரது அம்மாவிடம் தான் நான் என் விருப்பத்தை முதலில் தெரிவித்தேன்" பின்னர் அவர் உடனே சம்மதம் தெரிவிக்க பெற்றோர்களின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது என்று கூறி சிரித்தார் ஆர்யா. 


இதில் மேலும் படிக்கவும் :