வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (11:25 IST)

2020 - 2021 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவில்லை - ரிசர்வ் வங்கி!

2020 - 2021 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

 
2020 -2021 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. athil, முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
மேலும், 2020 மார்ச் 31 நிலவரப்படி, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளில் 83.4% புழக்கத்தில் இருந்தது. இது, 2021 மார்ச்சில் 85.7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த 2020 மார்ச் மாதம் 5.48 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021ம் ஆண்டில் 4.9 லட்சம் கோடியாக சரிந்து விட்டது. 
 
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு வருவது எந்தக் காரணத்துக்காக என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 500 நோட்டு புழக்கம் 31.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2020 மார்ச்சில் 25.4 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.