ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (22:05 IST)

ஆர்.டி.ஜி.எஸ். பணபரிவர்த்தனை 14 மணி நேரம் செயல்படாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஆர்.டி.ஜி.எஸ். பணபரிவர்த்தனை 14 மணி நேரம் செயல்படாது
வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்யும் முறைகளில் ஒன்றான ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை 14 மணிநேரம் செயல்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பண பரிவர்த்தனை செய்வதற்கு நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் ஆகிய இரண்டு முறைகளை பயன்படுத்தி வருவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆர்டிஜிஎஸ் பணபரிவர்த்தனை ஏப்ரல் 18-ஆம் தேதி 14 மணி நேரம் செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
 
ஆர்டிஜிஎஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணி நடைபெறுவதாகவும் அதன் காரணமாக  ஏப்ரல் 18-ஆம் தேதி 14 மணி நேரம் செயல்படாது என அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் அன்றைய தினம் நெஃப்ட் மற்றும் மாற்று வழிகளில் பண பரிவர்த்தனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆர்டிஜிஎஸ் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவக்ரள் முன்கூட்டியே பண பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது