Daily Horoscope
✕

2,000 ரூபாய் நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு உண்டா? மத்திய அரசு தகவல்..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 25 ஜூலை 2023 (10:21 IST)
2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் இந்த காலத்தை நீட்டிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. எனவே செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்திருந்தது. 
 
இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுப்பு உண்டா என்பது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் அப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை என்று  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ சவுத்ரி தெரிவித்தார்.  
 
மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை போல மற்ற நோட்டுகளை திரும்ப பெரும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

தீபாவளிக்கு 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு

பொங்கலுக்கு 'அண்ணன் சீர்' திட்டம்: தங்க நாணயம், பட்டு புடவைகளுக்கு டெண்டர்...

எலன் மஸ்க் ரூ.1900 கோடி செலவு பண்ணியும் தோத்துப்போன வேட்பாளர்...

மதுரை - தூத்துக்குடி இரட்டை அகல ரயில் பாதை: நிலம் கையகப்படுத்த அதிரடி கெஜட்!

சென்னைக்கு இனி தண்ணீர் பஞ்சமில்லை: ரூ.5,000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை!

அடுத்த கட்டுரையில்
Show comments