வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (22:09 IST)

ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1000 கோடி நன்கொடை வசூல் !

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1000 கோடி வரை நன்கொடை வசூலாகியுள்ளதாக  பெஜாவர் மடாதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.

யோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்தது. இதற்கான அடிக்கல்நாட்டுவிழா கடந்தாண்டு ஆக்ஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது.

இக்கோயில் சுமார் 161 அடி உயரத்தில் மூன்று தளங்கள் உடைய பிரமாண்டமான கட்டப்பட்டவுள்ளது.


இக்கோயிலைக் கட்டுவதற்கான நிதிதிரட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நிதி கொடுத்தார். ஜனாதிபதி உள்ளிட்ட நாடு முழுவதிமும் இருந்து பலரும் இதற்கான நிதி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியுமான விஸ்வபிரசன்னா தீர்த்த சுவாமி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

இந்தியாவிலுள்ள அனைத்துத் தரப்பினரும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை கொடுத்து வருகின்றனர். இது மக்களின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு சான்றாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார் .