செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:34 IST)

இங்கிலாந்து எதிரான தொடரில் இந்திய அணியின் இடம்பிடிக்கும் நடராஜன் !

தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டி-20 மற்றும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விக்கெட்கள் வீழ்த்தி பெரும் சதனை படைத்தார்.

இந்நிலையில்,. இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெறவுள்ளார் நடராஜன்.

வரும் 20 ஆம் தேதி துவங்கவுள்ள விஜய் ஹசாரே தொடரில் நடராஜன் இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடுவதற்கு ஏற்ப நடரஜனை அத்தொடரிலிருந்து விடுவிக்குமாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ தகவல் தெரிவித்தது.

எனவே அவர் தமிழக கிரிக்கெட் சங்கம் நடராஜனை விடுவித்துள்ளது. ஆக்கர் கிங்கான நடராஜன் இதில் தனது திறமையை நிரூபிப்பார் எனத் தெரிகிறது.