1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (20:39 IST)

சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை!

சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை!
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் முறையற்ற உறவு வைத்த நபருடன் இணைந்து தனது தாய் தந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேர்களை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 
 
கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி சலீம் என்ற நபருடன் ஷப்னம் என்ற பெண் இணைந்து தாய் தந்தை உள்பட தனது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை கோடாரியால் வெட்டி படுகொலை செய்தார்
 
இந்த வழக்கில் சலீம் மற்றும் ஷப்னம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஷப்னம் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது
 
இந்த தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது மேலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது இதனை அடுத்து விரைவில் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது
 
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது