1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2023 (16:46 IST)

ரஜினிகாந்த் பேச்சை கிண்டல் செய்த நடிகை ரோஜா.. என்ன காரணம்..?

Roja
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆர் நூறாவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ’சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் தான் ஹைதராபாத் ஹைடெக் தொழில் நகரமாக மாறியது என்று தெரிவித்திருந்தார்
 
 அவரது பேச்சுக்கு நடிகையும் ஆந்திர மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த் பேசியது சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது என்றும் 2003 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சி காலம் முடிந்துவிட்டது என்றும் அதன் பின் 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஹைதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் 20 ஆண்டுகாலம் ஹைதராபாத் வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு எப்படி காரணமாக இருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
ரஜினிகாந்த் உடன் நடிகை ரோஜா உழைப்பாளி, வீரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran